‘டாக்ஸிக்’ டீஸர் மீதான விமர்சனங்களால் நடிகை பீட்ரிஸ் டாபென்பாக் எடுத்த திடீர் முடிவு!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது. மார்ச் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் இடம்பெற்ற சில  காட்சிகள் சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, காரில் ஒரு பெண்ணுடன் யாஷ் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக டீசருக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த டீசர் சர்ச்சை தொடர்ந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்திருந்த நடிகை பீட்ரிஸ் டாபென்பாக் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading