பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தீபிகா படுகோனே, தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2028ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 40 வயதிலும் தனது இளமை, உற்சாகம் மற்றும் சிறந்த உடற்கட்டைக் கோப்பை எவ்வாறு பேணிக் கொண்டிருக்கிறார் என்பது குறித்த ரகசியத்தை தீபிகா படுகோனே பகிர்ந்துள்ளார். தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தவறாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதே தனது இளமைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தினசரி உணவு முறையில் அதிக கவனம் செலுத்தி, உணவுகளை ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடுவதாகவும், இதுவே தனது உடல் நலம் மற்றும் கட்டுக்கோப்பை பாதுகாக்க உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். காய்கறிகள், பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் மீன் போன்ற உணவுகள் தான் தனது விருப்பமான மற்றும் முக்கியமான உணவுகள் என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார்.
