‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள 64வது படத்தையும் தானே இயக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகினாலும், படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்று வரும் அஜித், தற்போது பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், வரவிருக்கும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட தயாராகி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் பயணம் குறித்து உருவாகியுள்ள ஆவணப்படத்தை, அஜித்தின் பிறந்தநாளான வருகிற மே 1ஆம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
