ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? தொடரும் சிக்கல்!

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தணிக்கை தொடர்பான பிரச்னைகள் காரணமாக, பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் படம் பல சிக்கல்களை சந்தித்து, இதுவரை வெளியாகாமல் தாமதமாகியுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கினால், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை எதிர்த்து விஜய் படக்குழு சார்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஜனநாயகன்’ படம் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading