மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈரத்த யஷ்-ன் ‘டாக்ஸிக்’ பட கதாபாத்திர அறிமுக வீடியோ!

பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ரசிகர் ஆதரவை பெற்றுள்ள பிரபாஸ், அல்லு அர்ஜுன், யஷ் போன்ற நடிகர்களின் திரைப்பட வீடியோக்கள் வெளியாகும் ஒவ்வொரு முறையும், அவை தொடர்ந்து புதிய சாதனைகளை நோக்கி பயணிப்பது வழக்கமாகி விட்டது. இதற்கு மாறாக, தமிழ் நடிகர்களில் யாருக்கும் இதுவரை அந்த அளவிலான பான் இந்தியா வியாபாரமும், அதே தரத்தில் வசூல் சாதனைகளும் கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலைமை என்ற உண்மை பேசப்படுகிறது.

கடந்த பத்து நாட்களாக விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்களின் டிரைலர்கள் பெற்ற பார்வைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்த இரு டிரைலர்களுக்கும் கிடைத்த பார்வைகளில் பாதிக்குமேற்பட்டவை போலியானவை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்ட எண்ணிக்கைகள் என்றும் பலரும் குற்றம் சாட்டி பதிவுகளை பகிர்ந்தனர்.

இந்த சூழ்நிலையில், ‘கேஜிஎப்’ திரைப்படம் மூலம் பான் இந்தியா புகழ் பெற்ற கன்னட நடிகர் யஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அடுத்த திரைப்படமான ‘டாக்சிக்’ படத்திற்கான கதாபாத்திர அறிமுக வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இது முழுமையான டிரைலர் கூட அல்ல. ஒரு கல்லறை பகுதியில் காரிலிருந்து இறங்கி யஷ் சண்டை போடும் ஒரே ஒரு காட்சி மட்டுமே அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், கவர்ச்சியும் அதிரடியான ஆக்ஷனும் நிறைந்த அந்த வீடியோ தற்போது 50 மில்லியனைத் தாண்டிய பார்வைகளை பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading