நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ஓ பேபி’ திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி, இந்த படத்தையும் இயக்கி வருகிறார். கதைக்களம் மற்றும் சமந்தாவின் வித்தியாசமான கதாபாத்திரம் காரணமாக இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டீசர் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சமந்தாவின் திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால், இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.
