‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி அதிலேயே நடித்தும் பெரிய வெற்றியை பெற்றார். அதன் பின்னர் ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற படங்களில் நடித்துப் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.கே.’ திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. இதே நேரத்தில் புதிய படங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘இயக்குநராக செயல்படுவதா, நடிகராக இருப்பதா ? என்பதில் எதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தற்போதைக்கு நடிப்பில்தான் முழு கவனமும் இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநராக வரமாட்டேன் என்று முழுமையாக சொல்ல முடியாது. ஒரு நல்ல கதை முழுமையாக தயாராகி விட்டால், இயக்குநராக என்னை பார்க்கலாம். எல்லாமே சூழ்நிலையைப் பொறுத்தது. ஒரு கதை என் மனதில் இருக்கிறது. அதில் பாதியை எழுதி முடித்திருக்கிறேன். முழுவதும் முடிந்த பிறகு அதற்கான முடிவை சொல்கிறேன்” என கூறியுள்ளார்.
