ஆஸ்கார் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதி பெற்ற ‘காந்தாரா – 2’ திரைப்படம்!

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவின் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதி பெற்ற உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் ‘காந்தாரா சாப்டர் 1’ இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் அகாடமி நிர்ணயித்துள்ள அனைத்து தகுதி விதிகளையும் இந்த படம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்துடன் சேர்த்து, அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2022-ம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படமும் அப்போதைய ஆஸ்கர் தகுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அந்த படம் இறுதிப்பட்டியலில் இடம்பெறாமல் போனது.

98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அந்த இறுதிப் பட்டியலில் ‘காந்தாரா சாப்டர் 1’ இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading