துபாயில் பிரபல தயாரிப்பாளரும், தொழிலதிபருமான கண்ணன் ரவியின் Panther Club-ஐ திறந்த வைத்த பாலிவுட் கிங் ஷாருக்கான்!

இனி துபாய் செல்கின்றவர்கள் துபாயில் தவறாமல் செல்ல வேண்டிய இடமாக பிரபல தொழிலதிபரான கண்ணன் ரவி இந்த புத்தாண்டில் தொடங்கி இருக்கும் Panther club அமைந்துள்ளது.ஒரு தொழிலதிபராக, திரைப்படத் தயாரிப்பாளராக பல சாதனைகளை செய்துள்ள கண்ணன் ரவியின் அடுத்த முயற்சி தான் இந்த Panther Club. 

எதைச் செய்தாலும் புதியதாகவும் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டுள்ள கண்ணன் ரவி பல மாதங்கள் திட்டமிட்டு உருவாக்கியுள்ள இந்த Panther Club-ஐ தொடங்கி வைத்தவர் இந்தி பட உலகின் முடி சூடா மன்னனாக விளங்குகின்றன நடிகர் ஷாருக்கான்

பொதுவாக இதுபோன்ற  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமின்றி ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கு இருந்து உணவருந்தி விட்டு சென்றார் என்றால் அதற்குக் காரணம் கண்ணன் ரவியின் நேசமான அழைப்பு தான். கண்ணன் ரவி தன்னுடைய புதல்வரான தீபக் ரவியோடு இணைந்து உருவாக்கி இருக்கும் இந்தக் கிளப் இனி இளைஞர்களின் விலாசமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. துபாய்க்கு என்று பல அடையாளங்கள் இருக்கின்றன.2026 ஆம் ஆண்டில் துபாயின் புதிய அடையாளமாக.உருவாகி இருப்பது தான் கண்ணன் ரவியின் பேந்தர் கிளப்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading