உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி இந்த படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுந்தர் சி இயக்குவதில் இருந்து சில காரணங்களால் விலகி விட்டார்.
இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து இவர்களில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து செய்திகள் உலா வந்தன.
ஆனால் தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இப்படத்தினை யார் இயக்க உள்ளார் என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
