அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தேவதாஸ் கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கேபியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனாவும் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலரும், அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘டிசி’ படத்தின் மொத்தம் 15 பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஜூலை 24 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாடல்களின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Add a Comment
