மம்முட்டி – மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட்ரியாட்’. இந்த படம், இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் 8-வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில் குமார் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களமாக அமைந்துள்ள படம் என்பது டீசர் மூலம் தெளிவாக தெரிய வந்தது.

இந்த நிலையில், கடந்த 130 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களும் ஒன்றாக நடித்திருப்பதால், இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading