‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை அவரது உதவி இயக்குநரான மதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘வித் லவ்’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இணை தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் பசிலன் அவர்களின் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இளைஞர்களை கவரும் வகையில் உருவாகும் காதல் கதையம்சம் கொண்ட இந்த படம், வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட
