வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை நிதி அகர்வால், தற்போது மூன்று புதிய திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர், தனது அடுத்தகட்ட சினிமா பயணம் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படத்திற்குப் பிறகு, தனக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியதாக நிதி அகர்வால் கூறியுள்ளார். குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் தற்போது மூன்று புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அந்த படங்களின் முழு விவரங்கள் ‘தி ராஜா சாப்’ படம் வெளியான பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால், அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’, ரவி மோகனுடன் ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
