பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஈரானிய நடிகர் சஜ்ஜத் டெலப்ரூஸ்!

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘ராஜா சாப்’ திரைப்படம், வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘ஸ்பிரிட்’, ‘பவுசி’ ஆகிய புதிய படங்களும், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘சலார்’, ‘கல்கி’ திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. இதில், ‘பவுசி’ படத்தை ‘சீதாராமம்’ புகழ் இயக்குனர் அனுராகவ புடி இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட உள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடித்துள்ளார். மேலும், மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானுச்சந்தர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக, ஈரானைச் சேர்ந்த நடிகர் சஜ்ஜத் டெலப்ரூஸ் நடிக்க உள்ளார். ஈரானை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும், இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களிலேயே நடித்துவருகிறார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். இந்த நிலையில், பிரபாஸ் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் நடிகர் சஜ்ஜத் டெலப்ரூஸ் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading