விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான அப்டேட்!

ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 99வது திரைப்படம் ‘மகுடம்’. இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார்.

மூன்று விதமான கெட்டப்புகளில் விஷால் நடித்துள்ள இந்த படம், கப்பல் துறைமுகத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று ‘மகுடம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஷால் காட்சியளிக்கிறார். மேலும், இந்த திரைப்படம் 2026ஆம் ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading