ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களின் டிரெய்லர்கள் எப்போது ரிலீஸ்? வெளியான புது அப்டேட்!

நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ள நிலையில், அவரது நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் அமைந்துள்ளது. இனி விஜய்யை திரையில் காண முடியுமா என்ற ஏக்கத்துடன், இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில், இயக்குநர் சுதா கொங்காரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், ‘ஜன நாயகன்’ வெளியான மறுநாளான ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 2-ம் தேதியும், ‘பராசக்தி’ திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 3-ம் தேதியும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களை சுற்றியும் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வலம் வந்தாலும் சினிமா ரசிகர்கள் இரண்டு படங்களையும் வரவேற்க்க காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading