தமிழில் வெளியான கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ திரைப்படம்!

புத்தாண்டான நேற்று ஜனவரி 1ஆம் தேதி, தமிழ் சினிமாவின் 2026ஆம் ஆண்டுக்கான வெளியீடுகள் டப்பிங் படத்தின் மூலம் தொடங்கியுள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், கன்னடத்தில் தயாரித்துள்ள ‘மார்க்’ திரைப்படத்தில் நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘மேக்ஸ்’ படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், கடந்த வாரம் கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்படங்களின் நேரடி வெளியீடுகள் இன்று தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக நேற்று வெளியான ‘மார்க்’ டப்பிங் படம், 2026 திரைப்பட வெளியீடுகளுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading