தளபதி விஜய் அரசியலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது – இயக்குனர் ஹெச் வினோத் OPEN TALK!

சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்த விஜய்யின் நடிப்பில் ஜன நாயகன் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஹெச் வினோத், மனிதர்களை நான்கு வகை என்றவாறு தனது கருத்தை கூறியுள்ளார்.  அதில் விஜய்யின் அரசியலும் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதாவது, முட்டாள்கள் என்பவர்கள் தங்களுக்கும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எது நல்லது, எது கெட்டது என்பதை உணராதவர்கள். அறிவாளிகள் நல்லதும் கெட்டதும் எது என்பதை தெளிவாக அறிந்தவர்கள். மூன்றாவது வகையான அறிவாளி அயோக்கியர்கள், நல்லது எது என்பதை வெளியில் சொல்லாமல், அதை தங்களுடைய சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். நான்காவது வகையான முட்டாள் அயோக்கியர்கள், இந்த அறிவாளி அயோக்கியர்களுக்கு அடியாள்கள் போல செயல்பட்டு தவறான விஷயங்களை செய்து கொண்டே இருப்பார்கள் என்றார். 

மேலும் இந்த நான்கு வகை மனிதர்களையும் சரியாக சமாளித்தாலே போதும். அவர் அரசியலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading