தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். முருகதாஸ். அஜித்தின் ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தைப் பற்றி ஏ.ஆர். முருகதாஸ் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், “எனது அடுத்த படத்தில் ஒரு குரங்கை ஹீரோவாக வைத்து கிராபிக்ஸ் அடிப்படையிலான திரைப்படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
மேலும், உதவி இயக்குநராக பணிபுரிந்த காலத்திலிருந்தே இந்த யோசனை எனக்கு இருந்தது. இதைத்தான் எனது முதல் படமாக எடுக்க நினைத்திருந்தேன். குழந்தைகளுக்கான படமாக இந்த திரைப்படத்தை உருவாக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
