‘கேஜிஎப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியவர் ஸ்ரீநிதி ஷெட்டி. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்த இவர், தொடர்ந்து தெலுங்குத் திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘ஹிட் 3’, ‘தெலுசு கதா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஆதர்ஷ குடும்பம் – எகே 47’ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற ஸ்ரீநிதி ஷெட்டியிடம், அவர் ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அந்தத் தகவல்களில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினார்.
‘கேஜிஎப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நான் ஒரு சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது நான் அவ்வளவு தொகையைக் கேட்பதாகச் சொல்வது எப்படி நடக்கும்? அனைத்துமே வதந்திகள்தான்” என்று அவர் கூறினார்.மேலும், தனது புதிய படத்தில் இதுவரை முயற்சி செய்யாத நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். இப்படத்தை ‘பிளாஸ்ட்’ படத்துடன் ஒப்பிடுவது குறித்துப் பேசிய அவர், “இந்தப் படத்தில் நான் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை. இரண்டு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
