‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் உருவாக வாய்பில்லையா? வெளியான முக்கிய தகவல்!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் 2-ம் பாகம் உருவாகும் என்ற தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் முடிவிலிருந்தே 2-ம் பாகத்துக்கான கதை எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், விரைவில் அறிவிப்பு வரும் என இணையவாசிகள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில், ‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் குறித்து அமீர்கான் மற்றும் மாதவன் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். அமீர்கான் பேசுகையில், 3 இடியட்ஸ்’ உருவான காலம் மிகவும் மகிழ்ச்சியானது. நான் நடித்த கதாபாத்திரங்களில் ராஞ்சோ தான் அதிகம் பேசப்பட்ட ஒன்று. அதன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் என்னை அணுகவில்லை” என்றார்.

மாதவன் கூறுகையில், 2-ம் பாகம் என்ற எண்ணமே கேட்க நல்லதாக உள்ளது. ஆனால், அது நடைமுறை சாத்தியமில்லை என நினைக்கிறேன். எங்களுக்கெல்லாம் இப்போது வயதாகிவிட்டது. கதாபாத்திரங்கள் எங்கே செல்கின்றன என்பதைக் காட்டுவது சிந்திக்கத்தக்கது தான். ஆனால் அது 2-ம் பாகமாக பொருந்துமா என்பது சந்தேகமே. ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன். ஆனால் அது கட்டாயமாக ‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகமாக இருக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading