ஜீவாவின் 49-வது படம் ‘தகப்பன்’: இயக்குநர் முகமது முஸ்தபாவுடன் கூட்டணி!

பொங்கல் வெளியீடான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் மூலம் வரவேற்பைப் பெற்ற நடிகர் ஜீவா, அடுத்ததாக ‘தகப்பன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ‘தகப்பன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் அவரது 49வது படத்தை முகமது முஸ்தபா இயக்குகிறார். இப்படத்தில் நிமிஷா சஜயன் மற்றும் ‘வாழை 2’ படத்தில் நடித்த ஏஞ்சல் மரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கியுள்ளது.

நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி இயக்குநராகவும் முத்திரை பதித்தவர் முகமது முஸ்தபா. அவர் இயக்கிய முதல் படமான ‘கப்பேலா’வுக்காக கேரள மாநில அரசின் சிறந்த அறிமுக இயக்குநர் விருதைப் பெற்றார். தொடர்ந்து, கேங்ஸ்டர் திரைப்படமான ‘முரா’வை இயக்கினார்.தற்போது ஜீவா – முகமது முஸ்தபாவின் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply