பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும்?

‘அனிமல்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது பிரபாஸின் 25வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் த்ரிப்தி டிம்ரி, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரிலீஸ் தேதியுடன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால், ‘ஸ்பிரிட்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading