ரூ.40 கோடி தருகிறோம் என்றும் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் சுனில் ஷெட்டி!

பாலிவுட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சுனில் ஷெட்டி. தமிழில் ஜீவா இயக்கத்தில் வெளியான ‘12 பி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதன் பின்னர் தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தாமல், பெரும்பாலும் ஹிந்தி திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். இருப்பினும், 2020ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்த நிலையில், புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க ரூ.40 கோடி வழங்க தயாராக இருந்த போதும், அதைத் தெளிவாக மறுத்த சம்பவம் குறித்து சுனில் ஷெட்டி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க என்னை அணுகினர். அதற்காக ரூ.40 கோடி தருவதாக கூறினார்கள். பணம் காட்டினால் நான் மயங்கிவிடுவேன் என்று நினைத்தீர்களா என்று அவர்களிடம் கேட்டேன். அந்த அளவிலான தொகை தேவைப்பட்டாலும், என் மகன் மற்றும் மகளுக்கு எதிர்காலத்தில் களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலும் நான் செய்ய மாட்டேன்.

அப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்பது என் கொள்கை. அதனால் தான் அதை நிராகரித்தேன். அதன் பிறகு இவ்வகை விளம்பரங்களுக்காக என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் இலட்சியங்களுடன் சமரசம் செய்து கொள்ள நான் தயாரில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading