‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

2020ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. பக்தி மற்றும் சமூக கருத்துகளை உள்ளடக்கிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திலிருந்து சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகவும், கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading