‘மண்டாடி’ படத்தில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகர் மிதுன் ஜெய்சங்கர்!

‘செல்பி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர்கள் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்துவரும் புதிய படம் ‘மண்டாடி’. இந்த படத்தை ஆர்.எஸ். எண்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றி வருகிறார்.

முழுக்க முழுக்க கடலையே பின்னணியாகக் கொண்டு, மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘ஆவேசம்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகர் மிதுன் ஜெய்சங்கர், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பமாக அமையும் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading