விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதனைத் தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சர்க்கார்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது, வரலட்சுமி சரத்குமார் முதன்முறையாக ‘சரஸ்வதி’ என்ற திரைப்படத்தை இயக்கி, அதிலேயே நடித்தும் உள்ளார். இந்த படத்தை தனது தங்கை பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதில் ராதிகா சரத்குமார், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ்சர பக்கத்தில் பகிர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமார், இது ஒரு சிறந்த பயணம். இந்த படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.
