வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக தனது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, இப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ‘ஜன் நேட்டா’ என்ற தலைப்பில் வட மாநிலங்களில் வெளியாக உள்ளது.
இந்த ஹிந்தி பதிப்பை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. விஜய் மற்றும் பாபி தியோல் இருவரும் இடம்பெற்றுள்ள அதிரடியான போஸ்டருடன் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
