நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரூ.665 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய திரையரங்கு விநியோக உரிமையை பென் மருதர் நிறுவனம் ரூ.250 கோடிக்கும், வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.175 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுதவிர, தொலைக்காட்சி உரிமை ரூ.25 கோடிக்கும், இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மொத்த வியாபார மதிப்பு ரூ.665 கோடியாகும்.
Add a Comment
