ஏ.ஐ. டீப்பேக் விவகாரம்; அமித் ஷாவிடம் புகார் அளித்த சிரஞ்சீவி, ராம் சரண்!

நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களின் உருவங்களைத் தவறாகச் சித்தரிக்கும் டீப்பேக் வீடியோக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது அமித் ஷாவை வரவேற்ற இருவரும், அவருக்குப் பொன்னாடை அணிவித்து சிலை மற்றும் பூங்கொத்து வழங்கினர். அப்போது, பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்கள், குரல் மற்றும் உருவங்களைப் பயன்படுத்திப் போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவது குறித்து தங்களது கவலையைத் தெரிவித்தனர்.

இதுபோன்ற வீடியோக்கள் தனிநபர்களின் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதிப்பதுடன், குறிப்பாகப் பெண்களுக்கும் திரையுலகினருக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, ஏ.ஐ. மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.‌அவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட அமித் ஷா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply