ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ டிரெய்லர் !

மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜான் டோ’. இதில் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி, சோபு யார்லகட்டா தயாரித்துள்ளனர்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply