கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 45 தி மூவி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸை முன்னிட்டு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் சிவராஜ்குமார், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜெயிலர் 2 படம் குறித்து அப்டேட் வழங்கினார். அதில், ஒரு நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், ஜனவரி மாதத்தில் மேலும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் தனது கேமியோ கதாபாத்திரம் நீளமாக இருக்கும் என்றும், இரு திரையுலகங்களுக்கிடையேயான நட்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
