அல்லு அர்ஜுன் – திரிவிக்ரம் கூட்டணி இதற்கு முன்பு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலூ தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

தற்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக புதிய திரைப்படத்தில் இணைகிறது. திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவிலான பிரம்மாண்ட புராணக் கதையாக, ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
பிப்ரவரி 2027-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
