உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகிறதா விஜய் தேவரகொண்டா – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரவுடி ஜனார்தானா?

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ரவுடி ஜனார்த்தனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் கிழக்கு கோதாவரியையும் அங்கு நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.

இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading