‘மூக்குத்தி அம்மன் 2’ வெற்றிக்காக காளிகாம்பாள் கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா!

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். குஷ்பு சுந்தர், விக்னேஷ் சிவன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதன் வெற்றிக்காக நயன்தாரா இன்று சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது பெண் பக்தர்களுக்குப் புடவை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.

Add a Comment

Leave a Reply