ஸ்ரீ மதுராஜா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீமதுராஜா தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் புதிய படம் ‘புகார்’. ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி. மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். நாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார்.

இரண்டாவது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்க, இன்னொரு நாயகியாக ஜனுஷ்கா இணைந்துள்ளார். மற்ற கலைஞர்கள் தேர்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
படம் குறித்து இயக்குநர் ஏ.சி. மணிகண்டன் பேசுகையில், இது கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் படம் என்றும், இன்றைய சமூகத்தில் காதலால் நடைபெறும் கௌரவ கொலைகள், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் வலி மற்றும் அதன் பின்னர் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இப்படம் காதலால் ஏற்படும் கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு முயற்சியாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
