விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தலைவன் தலைவி. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் படம் டிரெயின். யாரும் எதிர்பார்க்காத மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீவத் செய்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான கன்னக்குழிக்காரா தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள நிலையில், கபிலன் எழுதிய பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
