நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ், நடிகராக அறிமுகமானதுடன் தற்போது இயக்குநராகவும் புதிய படத்தை இயக்கி வருகிறார். முழுக்க பள்ளி பருவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் ஜாலியான கதைக்களத்தில் தயாராகி வருகிறது.

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் கென் கருணாஸுடன் இணைந்து சுராஜ் வெஞ்ராமுடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் பள்ளி வளாகத்திலேயே படமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நடிப்பது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
