டிரெண்டாகும் ‘வேட்டுவம்’ படத்தின் புதிய ‘World of Vettuvam’ வீடியோ!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்காப்புக் கலை, அரசியல் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், சில முக்கியமான காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘வேட்டுவம்’ கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், ‘World of Vettuvam’ என்ற புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அதன் உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. வெளியாகியுள்ள புதிய காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ‘வேட்டுவம்’ மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading