அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்துவரும் படம் ‘மைசா’. இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசரில், ரத்த வெள்ளத்தில் எதிரிகளை சுட்டு வீழ்த்த தயாராக நிற்கும் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. பின்னணியில் “சாவே செத்து போச்சு என் மகளை கொல்ல” என்ற ஈஸ்வரி ராவின் கம்பீர குரலும் அதிர்வை ஏற்படுத்துகிறது.
இந்தப் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா, தனது திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு துணிச்சலான மற்றும் வன்முறை நிறைந்த ஆக்ஷன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான, முரட்டுத்தனமான தோற்றத்தில் ‘மைசா’ என்ற கோண்ட் பழங்குடிப் பெண் கதாபாத்திரத்தை வலிமையாக சித்தரிக்கிறார். டீசரின் இறுதியில் அவர் எழுப்பும் கர்ஜனை, கதாபாத்திரத்தின் கோபமும் ஆக்ரோஷமும் வெளிப்படும் வகையில் அமைந்துள்ளது.தெலுங்கானா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பான்-இந்தியா அளவில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
