இயக்குநர் ரவி பாபு இன்று தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘ரேஸர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள 45 வினாடிகள் கொண்ட டைட்டில் கிளிம்ப்ஸ், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த கிளிம்ப்ஸில் கைகள், உடல், தலை துண்டாகும் போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்று, பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன.
பிளையிங் பிராக்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மீண்டும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. ‘ரேஸர்’ படம் அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
