தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், தற்போது அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.
ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
‘இம்மோர்டல்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
