Monday, May 6, 2024

ஹாய் செல்லம் சொல்ல வேண்டியது பிரகாஷ் ராஜ் இல்லையாம்… கில்லியில் பிரகாஷ் ராஜ் ரோலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரகாஷ் ராஜ் ஒரு பிரபலமான பன்முக கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய சிறந்த நடிகர்.நாடக கலைஞரான இவர் பிறகு, பாலசந்தரின் பார்வையில் பட்டு அவரால் திரைப்படங்களில் நுழைந்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிப்பை மாற்றும் சில சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். அவர் கடைசியாக குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். புஷ்பாவின் இரண்டாம் பாகம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் படத்திலேயே திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜ், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் இவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், அப்பு படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் அசத்தியிருந்தார். இதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ், திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விஜய் கேரியரில் கில்லி முக்கியமான படம் இப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியையும் கொண்டாட்டத்தையும் கண்டுள்ளது.இப்படத்தில் விஜய்யின் நடிப்பை விட பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவரி மற்றும் நடிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டது என்பது உண்மை. குறிப்பாக, செல்லம் என்று அவர் த்ரிஷா-ஐ கூப்பிட்டது இன்றும் ரசிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. பிரகாஷ் ராஜ் ஒவ்வொரு காட்சியிலும் மிக இயல்பாக நடித்து தூள் கிளப்பியிருப்பார். செல்லம் என்ற வார்த்தை பிரகாஷ் ராஜால் ஒரு அடையாளமாகவே ஆனது.

இந்நிலையில் கில்லியின் ஒரிஜினல் வெர்ஷனான ஒக்குடுவில் பிரகாஷ் ராஜ்தான் வில்லன். எனவே தமிழில் ரீமேக் செய்யும்போது அவரே நடித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த தரணி, அவருக்கு பதில் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனை நடிக்க வைக்கலாம் என்றுதான் முதலில் முடிவில் இருந்தாராம். ஆனால் தியாகராஜனோ நோ சொல்லிவிட்டாராம். பிறகுதான் மீண்டும் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார் தரணி.ஆனால் அவர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவரது காதாபாத்திரம் ஹிட் ஆனது.

- Advertisement -

Read more

Local News