Monday, May 6, 2024

வலியில துடிச்சாலும் அந்த படத்த முடிச்சுட்டு தான் ஆப்ரேஷன்-கே போனாரு… அஜித் பற்றி நெகிழ்ந்த சுந்தர் சி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரண்மனை 4 திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் மே 3ந் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலையே பெற்றுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை இயக்கிய போது அஜித்துடன் இருந்த அனுபவத்தையும் அவரின் உடல் நிலை குறித்து பல விஷயத்தையும் மிகவும் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டார்.
இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது. பேய், மர்மங்கள் என கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை எடுத்த போது நாங்கள் நியூசிலாந்தில் பாடல் காட்சிக்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு முதுகுவலி பிரச்சனையாக இருந்தது. இதனால், முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.அப்போது அவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் இன்னும் ஏழு நாளில் வெளிநாட்டில் செட்டில் ஆக போகிறார். அதற்குள் நான் ஆப்ரேஷன் செய்து ஆக வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல் அறுவை சிகிச்சைக்கு பின் உட்காரக்கூட முடியாத நிலை ஏற்படலாம், இதனால், இருக்கும்போதே அனைத்து காட்சிகளையும் எடுத்துவிடுங்கள் என்று கூறினார்.

இதை பற்றி தயாரிப்பு தரப்பிடம் கூறினால், அவர்கள் சம்மதித்தாலும், இல்லை என்றாலும் அடுத்தடுத்த இழப்புகள் ஏற்படும். இதனால் அஜித் சார் என்னிடம், கூறியதால், படப்பிடிப்பை விரைவாக முடிக்க திட்டமிட்டேன். நியூசிலாந்தில் அந்த நேரத்தில் 22 மணிநேரம் சூரிய வெளிச்சம் இருந்ததால், இரவு பகல் பார்க்காமல், ஒரே வாரத்தில் அஜித்தின் பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு அவரை அறுவை சிகிச்சைகாக அனுப்பி வைத்தோம் என்றார்.

அவர் பட்ட வலி எனக்கு அவர் சொல்லும் போது புரியவும் இல்லை தெரியவும் இல்லை. ஆனால், அவருக்கு முதுகில் இருக்கும் பிரச்சனையால், கால்களில் உணர்ச்சியே இல்லை. ரோட்டில் நடந்தால் அடுத்த அடுத்த கால்களால் அடியெடுத்து வைத்து நடந்து கொண்டே இருப்போம். ஆனால், அவர், தரையை பார்த்து தான் அவர் அடுத்த காலடியை எடுத்து வைப்பார். ஏனெனில் அவர் கால்களை எங்கு வைத்தோம் என்ற உணர்ச்சியே இருக்காது. அவரின் வாழ்க்கை பல வேதனைகளை கடந்தது. ஆனால், அந்த வேதனைகளை கடந்து சாதனை படைத்தார் அவர் என சுந்தர் சி நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்,

- Advertisement -

Read more

Local News