Monday, May 6, 2024

கோலிவுட்டில் இருந்து டோலிவுட்க்கு தனுஷ்-ஐ இழுக்கும் இயக்குநர்கள்… ரெடியான அடுத்த படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.கடந்த ஆண்டு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி படத்தில் நடித்தார் தனுஷ். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. தனுஷ் தற்போது மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.இதன் மூலம் தனுஷ் மீண்டும் ஒரு முன்னணி தெலுங்கு இயக்குனரோடு இணையவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிஷோர் ரெட்டி இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஷர்வானந்த் நடித்த ஸ்ரீகரம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், இயக்குனர் கிஷோர் ரெட்டி தனுஷ்-யை வைத்து இயக்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் தனுஷுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார் ஸ்ரீலீலா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News