Monday, May 27, 2024

வளையம் படப்பிடிப்பு நிறைவு! பிரியாணி விருந்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… இதென்ன புது ட்ரெண்டா இருக்கே…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக கன்னட சினிமாவில். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த படத்தில் சிறந்த நடிகைகளை தேர்வு செய்ததாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து பாவனா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் பங்கு பெற உள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழில் அடுத்ததாக “வளையம்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோபாரதி இயக்கியுள்ளார், இதில் ஹீரோவாக தேவ் அறிமுகமாகிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டல்லி பாபு தயாரித்துள்ள இந்த படத்தில் சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி மற்றும் சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் படமான இதன் துவக்க விழா சென்னையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது, இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இப்போது, படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை ஒட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார். தனது கையால் பிரியாணி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் பட குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த வீடியோ வைரலானதை போல, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் அதே பாணியில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News