Tuesday, May 28, 2024

லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயன் சந்திப்பு! என்னவாக இருக்கும்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் மற்றும் ரஜினிகாந்த்-ஐ தொடர்ந்து கலக்கி வரும் சிவகார்த்திகேயன், தனது உச்சநிலையைத் தக்கவைத்துக் கொண்டே இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘கோட்’ படத்தில் அவர் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ‘கூலி’ படக்குழுவை சந்தித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த ரஜினிகாந்த், ஓய்வுக்காக அபுதாபிக்கு சென்றுள்ளார். அடுத்ததாக அவர் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் ‘கூலி’ படத்தின் இயக்குனர் குழுவை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சந்துரு அன்பழகன், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். தற்போது ‘கூலி’ படத்தில் ரத்தின குமாருக்கு பதிலாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் குழுவில் இணைந்துள்ள சந்துரு அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News