Monday, May 27, 2024

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மின்சார கனவு ஜோடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கஜோலும், பிரபுதேவாவும் 1997-ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘மின்சார கனவு’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் இருவருக்கும் மிகப்பெரும் வெற்றியைத் தந்தது. இதில் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக வெளிப்பட்டது.

ஏ.ஆர். இசையமைத்த இதன் பாடல்கள் அனைத்தும் மிகுந்த பிரபலமடைந்தன. குறிப்பாக ‘ஸ்ட்ராபெரி பெண்ணே’ மற்றும் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் இன்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு, கஜோலும் பிரபுதேவாவும் மீண்டும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கும் இந்த புதிய பாலிவுட் திரைப்படம், அவர் இயக்கும் முதல் பாலிவுட் படமாகும். அதிரடி திரில்லர் வகையில் உருவாகும் இப்படத்தில் ஜிஷு சென்குப்தா, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், மற்றும் ஆதித்யா ஷீல் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படக்குழுவினர் விரைவில் டீசரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு கஜோலும் பிரபுதேவாவும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News