Monday, May 27, 2024

ரீ ரிலீஸ்க்கு ரெடியான இந்தியன் படம்… இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலக நாயகன் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். இவரது பல படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஊழலுக்கு எதிரான கதைக்களத்துடன், கமல்ஹாசன் சேனாபதி மற்றும் சந்துரு என இரு வேறு பாத்திரங்களில் நடித்திருந்தார். சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்து, ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் ஒன்றாம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் மறுபடியும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இந்த படங்கள் வெளியான போது தற்போதைய தலைமுறையினரும் இந்த படங்களை திரையரங்குகளில் அனுபவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஓடிடியில் இவை கிடைத்தாலும், திரையரங்குகளில் பார்க்கும் ஆர்வம் அதிகம் இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன்னதாக இந்தியன் படத்தின் ரிலீஸ் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளதாக இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News